உத்தரபிரதேசத்தில் காஜியாபாத் நகருக்கு உட்பட்ட மசூரி போலீஸ் நிலையத்தின் கீழ் வரும் கல்லூரி ஒன்றில் பயின்றுவரும் மாணவர்கள் இருகுழுக்களாக தங்களுக்குள் மோதி கொண்டனர். அவர்கள் சாலையின் நடுவே திடீரென்று ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும்போது, கார் ஒன்று விரைவாக வந்து மாணவர்கள் மீது மோதி நிற்கிறது. எனினும் சண்டை தொடர்ந்துள்ளது. கார் மோதிய நபர் எழுந்ததும், அவரை சிலர் தாக்கும் காட்சிகளும் வீடியோவாக வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற மாணவர்கள் இதை பார்த்து அந்த பகுதியிலிருந்து அலறி அடித்து ஓடுகின்றனர். அவர்களில் ஒருசில மாணவர்கள் காவல்துறையினரின் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காஜியாபாத் எஸ்.பி. இராஜ் ராஜா கூறியதாவது , சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து இருக்கிறோம். இம்மோதலில் தொடர்புடைய மற்ற மாணவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையில் மாணவர்கள் மீது மோதிய காரை பறிமுதல் செய்துள்ளோம். பிற விசயங்கள் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெறும். கல்லூரியை சுற்றிலும் காவல்துறையினர் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.