ரோட்டில் இருந்து எடுத்த தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் ஆட்டோ டிரைவரான பாபு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாபு ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவி சென்றுள்ளனர். அப்போது தம்பதியினர் சென்ற வாகனத்தில் இருந்து ஒரு சிறிய டப்பா கீழே விழுந்துள்ளது. அதனை பாபு எடுத்து திறந்து பார்த்தபோது தங்க நகைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து பாபு காவல்நிலையத்திற்கு சென்று அந்த தங்க நகைகளை ஒப்படைத்துவிட்டார். சிறிது நேரத்திலேயே தங்க நகையை தவறவிட்ட கருப்பசாமி-காளீஸ்வரி தம்பதியினர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்துள்ளனர். இதனையடுத்து கருப்புசாமி தான் நகையை தவிர விட்டாரா என உறுதிப்படுத்திய பிறகு காவல்துறையினர் அவரிடம் நகையை ஒப்படைத்தனர். மேலும் கீழே இருந்து எடுத்த நகையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.