கும்பல் ஒன்று பழிக்கு பழியாக வாலிபரின் தலையை வெட்டி ரோட்டில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கீழக்கரை பகுதியில் வசிப்பவர் திமுக பிரமுகர் பிரமுகர் வி.கே குருசாமி. இவருக்கும் மறைந்த முன்னாள் அதிமுக மண்டல தலைவர் ராஜபாண்டியன் என்பவருக்கும் பதினைந்து வருடங்களாக அரசியல் பகை இருந்து வந்துள்ளது. இந்த பகை காலப்போக்கில் இரு கும்பல்களுக்கு இடையேயான பகையாக மாறி ஒருவரை ஒருவர் பழி தீர்க்க ஆரம்பித்துள்ளனர். இந்த கும்பல்களால் இதுவரை சுமார் 15 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டாலும் அடுத்து இந்த கும்பலில் இருப்பவர்கள் தொடர்ந்து கொலை செய்து கொண்டு வந்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது குருசாமியின் உறவினர் ஒருவரை ராஜபாண்டியன் உறவினர்கள் கொலை செய்துள்ளனர். எனவே இதனை இதற்கு பழி வாங்குவதற்காக குருசாமியின் கும்பல் நேரம் பார்த்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் மற்றும் முனியசாமி கீழவெளி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் அவர்களை வெட்டியுள்ளனர். இதில் அவர்கள் சிறு காயங்களோடு தப்பித்துள்ளனர். ஆனால் அவர்களுடன் வந்த அப்பாவி வாலிபரான முருகானந்தம் என்பவரை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது மட்டுமல்லாமல் அவருடைய தலையை தனியாக எடுத்து ரோட்டில் மக்கள் அதிகமான கூட்டத்தில் வீசியுள்ளது. இதைப் பார்த்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு கேமராவை பார்த்து குற்றவாளிகளை கண்டறிந்துள்ளனர். மேலும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.