Categories
உலக செய்திகள்

ரோந்து பணியில் இருந்த ரஷ்ய படகுகள்…. டிரோன் மூலம் அழித்த உக்ரைன்…. கருங்கடலில் பரபரப்பு….!!

கருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரஷ்ய படகுகளை டிரோன் மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் இரண்டு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று கருங்கடலில் பாம்பு தீவுக்கு நடுவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய படகுகளை துருக்கியில் தயாரிக்கப்பட்ட Bayraktar என்ற ட்ரோன் மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்தின் மூத்த அதிகாரி வலேரி ஜலுஷ்னி கூறியதாவது ராப்டர் வகை படகுகளை தாக்கிய அழித்ததால் இந்தப் படகுகள் மூழ்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ராப்டர் வகை படகு அதிவேகமாக செல்லும் திறன் கொண்டதாகவும் இந்தப் படகில் 23 பேர் பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அழிக்கப்பட்டதாக கூறப்படும் இந்தப் படகில் யாரேனும் இருந்தார்களா என்ற விவரம் தெரியவில்லை. மேலும் இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா தரப்பிலிருந்து விளக்கமோ, மறுப்போ இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

 

Categories

Tech |