Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்…. வசமாக சிக்கிய வாலிபர்…. பெரும் பரபரப்பு…!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூசாரிபாளையம் கிராமத்தில் வளவனூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த டிராக்டரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையில் ஓடையில் இருந்து மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பூசாரிபாளையம் பகுதயைச் சேர்ந்த கஜேந்திரன் என்பது தெரியவந்தது. இவரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பிறகு டிராக்டர் மற்றும் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

Categories

Tech |