Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது வசமாக சிக்கிய 5 பேர் கைது…. 300 கிராம் கஞ்சா பறிமுதல்… போலீஸ் விசாரணை….!!!

ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக புகார்கள் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாமி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் சென்ற போது சந்தேகப்படும்படி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் களியக்காவிளை ஆர்.சி தெருவில் வசித்து வரும் 38 வயதுடைய அலெக்ஸ் மாணவர்களுக்கு கஞ்சா விற்பதற்கு வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோன்று சப்-இன்ஸ்பெக்டர் சிந்தாமணி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது கஞ்சா வைத்திருப்பதாக பனச்சமூடு தேங்கா பாறையில் வசித்த 40 வயதுடைய அப்துல் ஷமி, செக்கட்டி குழி தாணிமூடு பகுதியில் வசித்த 24 வயதுடைய ரசலுதின்,பாறவிளை புத்தன் வீட்டில் வசித்த 22 வயதுடைய ரியாஸ்கான், 21 வயதுடைய அகில் ஆகியோரை கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |