Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது….செல்போன், லேப்டாப் திருடியவர் கைது…. போலீஸ் விசாரணை….!!!!

அலுவலகங்கள் வீடுகளில் சார்ஜ் போட்டு வைத்திருக்கும் செல்போன்கள், லேப்டாப்களை திருடிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், ஆர். எஸ். புரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது தனியார் மருத்துவமனை அருகில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கண்காணித்தபோது மருத்துவமனைகள் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்ததார். உடனே காவல் துறையினர் அவரைக் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பொள்ளாச்சியில் வசித்த 45 வயதுடைய சசிகுமார் என்பதும், வீடுகள், அலுவலகங்களில் சார்ஜ் போட்டு வைக்கப்படும் செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை திருடி செல்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சசிகுமாரை காவல் நிலையத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கோவை அரசு அலுவலகங்கள், ஆர்.டி.ஓ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் அதிகமான லேப்டாப்கள், செல்போன்கள் திருடி அவற்றை விற்று ஜாலியாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சசிகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

கைதான சசிகுமார் குறித்து காவல்துறையினர் கூறியிருப்பதாவது, பொள்ளாச்சியிலிருந்து டிப்டாப்பாக ஆடை அணிந்து கோவை வரும் சசிகுமார் தனக்கு அறிமுகமானவர்களிடம் ஐ.டி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் அவர் எட்டாம் வகுப்பு தான் படித்து உள்ளார். மேலும் அவர் அரசு அலுவலகங்களுக்கு சென்று அங்கு சார்ஜ் போட்டு கிடக்கும் செல்போன்கள், லேப்டாப்களை யாரும் பார்க்காத நேரம் நைசாக திருடி சென்று அதை விற்று வந்துள்ளார். இதை போன்று வீடுகளில் திறந்திருக்கும் ஜன்னல் ஓரமாக வைத்திருக்கும் செல்போன்களை திருடி வந்துள்ளார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |