Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்”…. சாராயம் விற்பனை செய்த 9 பேர் கைது….!!!!!!

சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சாராயம் விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபொழுது தியாகராஜபுரம் ஏரிக்கரை அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மீனாட்சி, மொட்டையம்மாள், முத்தம்மாள், ஏழுமலை உள்ளிட்ட ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 41 லிட்டர் சாராயப்பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தார்கள்.

இது போலவே மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர், புதுப்பட்டு, மூலக்காடு, புளியங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குமார், வெள்ளையன், பிரபு, ராஜேந்திரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார்கள்.

Categories

Tech |