சுசீந்திரம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது கஞ்சா வைத்திருந்த 2 பேரை கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் அருகே இருக்கும் புதுகிராமம் குளக்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். அதில் அவர்களிடம் 15 கிராம் கந்தா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நாகர்கோவில் சேர்ந்த ராம்குமார் என்பதும் இந்திரா காந்தி நகரை சேர்ந்த அரவிந்த் என்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீஸ்சார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தார்கள். மேலும் அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.