மதுரையில் கஞ்சா விற்ற இரண்டு பேரை ரோந்து சென்ற காவல்துறையினர்கள் கைது செய்தனர்.
தமிழகத்தில் 2021 காண சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது . இதனால் பணம்பட்டுவாடா போன்ற செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினரும் பறக்கும் படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் அண்ணாநகரில் சப் இன்ஸ்பெக்டர் தயாநிதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ராஜா , அரவிந்த் குமார், பவித்ரன் ஆகிய மூவரும் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருப்பதை கவனித்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மூவரும் கஞ்சா விற்றது தெரியவந்தது. மேலும் இவர்களிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து பவித்ரன் என்பவர் தப்பிச் சென்றதையடுத்து ராஜா , அரவிந்த் குமார் ஆகிய இருவரின் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.