அரசு அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி -சாத்தூர் சாலையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 நபரை பிடித்த காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பால்ராஜ் மற்றும் சஞ்சய் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் அப்பகுதியில் அரசு அனுமதியின்றி பிஜிலி வெடிகளை வைத்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து பால்ராஜ் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.