Categories
தேசிய செய்திகள்

ரோப் கார் விபத்து…. பிரதமர் மோடி இன்று உரையாடல்….பெரும் பரபரப்பு….!!!

இன்று இரவு 8 மணிக்கு,பிரதமர் மோடி  ரோப் கார் விபத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுடன் உரையாட உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 1,500 அடி உயர திரிகூட் மலையில் ரோப் கார்கள் மோதி விபத்து ஏற்பட்டதில், 60 சுற்றுலா பயணிகள் சுமார் 46 மணி நேரத்திற்கும் மேலாக அந்த ரோப் கார்களில் சிக்கி இருந்தனர். இதையடுத்து இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, இந்தோ-திபெத் எல்லை போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து ரோப் கார்களில் சிக்கி இருந்தவர்களை மீட்டுள்ளனர்.

இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும்  12 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தானது தொழில்நுட்ப கோளாறு காரணமாக  நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்து விரிவான விசாரணை நடத்த ஜார்க்கண்ட் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு, இந்த சம்பவத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோரிடம் உரையாட உள்ளதாக,  பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |