Categories
தேசிய செய்திகள்

ரோப் கார் விபத்து…. 3 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் ரோப் கார்களில் சிக்கி அந்தரத்தில் தவிப்பவர்களை மீட்கும் பணி இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திரிகூட்மலைக் குன்றுகளுக்கு இடையே 40க்கும் மேற்பட்ட பயணிகள் சென்ற இரு ரோப் கார் திடீரென கோளாறு காரணமாக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் ரோப் காரில்  இருந்து ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அந்தரத்தில் சிக்கி தவிப்பவர்கள் 27 பேரை விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது 20 பேர்  சிக்கி உள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் ட்ரோன்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்பு பணி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |