உலகநாயகன் பிரபல நடிகருக்கு பரிசு கொடுத்துள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் 3 வாரங்கள் கடந்தும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் 400 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் வெற்றியால் உலகநாயகன் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம். இதன் காரணமாக உலகநாயகன் படக்குழுவினருக்கு பரிசுகளை வாரி வழங்குகிறாராம். அந்த வகையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு காரை பரிசளித்துள்ளார். அதன்பிறகு உதவி இயக்குனர்களுக்கு மோட்டார் சைக்கிளில் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
இந்தப் பரிசை குறித்த ஒரு புதிய தகவலை தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். அதாவது நடிகர் சூர்யாவுக்கு உலகநாயகன் வழங்கிய ரோலக்ஸ் வாட்ச் புதிதாக வாங்கப்பட்ட வாட்ச் இல்லையாம். அதாவது உலகநாயகன் தான் முதன்முதலில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய சமயத்தில் அதிக விலை கொடுத்து வாங்கிய பொருள்தான் சூர்யாவுக்கு கொடுத்த ரோலக்ஸ் வாட்ச். அந்த வாட்சை பல ஆண்டுகள் பத்திரமாக வைத்து தன்னுடைய மனதுக்கு பிடித்த சூர்யாவுக்கு கொடுத்துள்ளார் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.