Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரோலர் ஸ்கேட்டிங்கில் கின்னஸ் சாதனை…. பழனி மாணவருக்கு குவியும் பாராட்டுகள்…!!!!

கின்னஸ் சாதனை படைத்த பழனியை சேர்ந்த மாணவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவகங்காவில் ரோலர் ஸ்கேட்டிங் கின்னஸ் சாதனைக்கான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 1039 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாணவ- மாணவிகள் தொடர்ந்து நான்கு நாட்கள் ரோலர் ஸ்கேட்டிங் விளையாடி அசத்தியுள்ளனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுஆயக்குடியை சேர்ந்த கார்த்திகேயா(12) என்ற மாணவரும் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். அவருக்கு கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்கெடுத்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கார்த்திகேயாவை பழனி போலீஸ் சூப்பிரண்டு சிவசக்தி நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

Categories

Tech |