Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ரோல்ஸ் கார் விவகாரம்: விஜய்யின் மேல்முறையீட்டு மனு…. இன்று விசாரணை…!!!

நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூலை 13-ம் தேதி நீதிபதிஎம் .எஸ் சுப்பிரமணியம் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர்கள் வரிவிலக்கு கோருவதை ஏற்க முடியாது என்றும், நடிகர்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் தவிர ரீல் ஹீரோ இருக்கக்கூடாது என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது வரி தொடர்பான மேல்முறையீட்டு விசாரணை செய்யும் அமர்வு இந்த வழக்கை மாற்றம் செய்ய பதிவுத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு இன்று இரு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.

Categories

Tech |