நம் எல்லோருக்குமே ரோல்ஸ் ராய்ஸ் கார் பற்றி நன்றாகவே தெரியும். இந்த கார் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் காரை மிஷின் வைத்து செய்யாமல், மனிதர்களின் கைகளாலேயே செய்துள்ளனர் என்பது தான் ஆகும்.
ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க வேண்டும் என்பதை விட அதை தொட்டுப்பார்க்க வேண்டும் என்றுதான் நம் அனைவரின் மனநிலையாக இருக்கும். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தேஜூபாய் என்ற நபர் தனக்கான ரோல்ஸ் ராய்ஸ் காரை உருவாக்கியுள்ளார். இந்தக் காரை இவர் பியாட் பிரிமியர் பத்மினி காரை ஒப்பீட்டு உருவாக்கியுள்ளார்.
இவர் ரோல்ஸ் ராய்ஸ் காரின் பேந்தம் கார் எப்படி இருக்குமோ அதேபோன்று பார்த்து பார்த்து மிகவும் சரியாக உருவாக்கியுள்ளார். இந்த காரை இவர் முழுமையாக முடிப்பதற்கு கிட்டத்தட்ட 2 வருடத்திற்கு மேல் ஆகியது. இந்த கார் பார்ப்பதற்கு பேந்தம் கார் போன்று இல்லை என்றாலும், 80% ஒத்துப்போகிறது என்று கூறப்படுகிறது.