Categories
உலக செய்திகள்

“ரோஹிங்கயா அகதிகளை திருப்பி அனுப்ப உதவ வேண்டும்”…. பிரபல நாட்டிற்கு வங்கதேசம் வேண்டுகோள்…!!!!!!!!

தங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கின்ற ரோஹிங்கயா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கு சீனா உதவ வேண்டும் என வங்கதேசம் கோரிக்கை விடுத்து இருக்கின்றது. அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்யீ தலைநகர் டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனாவையும் வெளியூர் துறை அமைச்சர் ஏகே அப்துல் மோமனையும் சனிக்கிழமை சந்தித்து பேசி உள்ளார். அப்போது வங்கதேச அகதிகளால் முகாமில் தங்கி இருக்கின்ற ரோஹிங்கயாக்களை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்காக நடவடிக்கையில் சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வாங்யீயிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் மியான்மரில் சிறுபான்மை முஸ்லிம் இனத்தவரான ரோஹிங்யாக்கள் வன்முறைக்கு பயந்து அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.

கடந்த 2015 ஆம் வருடத்தில் இருந்து மட்டும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் வங்கதேசத்திற்கு வந்திருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் சுமார் 7 லட்சம் அகதிகளை திரும்ப பெறுவதற்கான ஒப்பந்தத்தை மியான்மர் அரசு வங்கதேசத்துடன் கடந்த 2017 ஆம் வருடம் மேற்கொண்டுள்ளது. இதற்கு மியான்மரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சீனா உதவியிருக்கிறது எனினும் வன்முறைக்கு பயந்து மியான்மருக்கு  திரும்பி செல்ல ஏராளமான ரோஹிங்கியா அகதிகள் மறுத்து  வருகின்றார்கள். இந்த நிலையில் அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கான சீனா உதவ வேண்டும் என வங்காளதேசம் தற்போது வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

Categories

Tech |