பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷித் லதிப் அஸ்வினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. அந்த போட்டியில் ஜடேஜா 175 ரன்களையும், (4,5) 9 விக்கட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதேபோல் இந்த போட்டியில் அஸ்வினும் (2,4) 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவ்வாறு இருக்க ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளரிடம் பேசிய ரோகித் சர்மா அஸ்வினை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதாவது அஸ்வின் ஒரு all-time கிரேட் பிளேயர் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி என்னைப் பொறுத்தவரை அவர்தான் சிறந்த வீரர் எனவும் ரோஹித் கூறியுள்ளார்.
இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த பாராட்டுகளை ஏற்கமுடியாது என்று பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷித் லதிப் அஸ்வினை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது அஸ்வின் எடுத்துள்ள 436 விக்கெட்டுகளில் 70 மட்டுமே வெளிநாட்டு மண்ணில் எடுத்தது என்றும், மீதமுள்ள 306 விக்கெட்டுகள் இந்தியாவில் எடுத்தது தான் என்று கூறியுள்ளார். ஆகையினால் சொந்த மண்ணைப் பொறுத்தவரை அவர் சிறந்த வீரர் என கூறிக் கொள்ளுங்கள் என்றும் ரஷித் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ரோஹித்தின் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.