Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரோஹித்துடன் இவர் ஓப்பனிங் ஆட வேண்டும்…. இதுதான் சரியா இருக்கும்…. முன்னாள் இந்திய வீரர் கருத்து..!!

டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும் என்று பார்த்தீவ் பட்டேல் கருத்து தெரிவித்துள்ளார்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடன் தோல்வியடைந்து வெளியேறியது.. இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக டி20 உலக கோப்பைக்கு தயாராகி வருகிறது. இந்த டி20 தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் பங்கேற்க இருக்கிறது..

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்திய அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் வீரர்கள் பற்றி தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.. அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பார்த்தீவ் பட்டேல் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

இது குறித்து அவர் கூறியதாவது, டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் பெரிய ஆடுகளங்களில் ரோஹித் சர்மா உடன் விராட் கோலி தொடக்க வீரராக இறங்கினால் அது சரியாக இருக்கும். ஏனென்றால் ரோகித் ஒருபுறம்  அதிரடியாக போட்டியை தொடங்கும் நிலையில், மறுபுறம் ரன்களை சரியாக சீராக கொண்டு செல்வதற்கு விராட் கோலி மிகவும் அவசியம்.. எனவே என்னை பொருத்தவரையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினால் நல்ல தொடக்கம் கிடைக்கும்.. அப்படி நல்ல துவக்கம் கிடைத்தபின் அடுத்து வரும் வீரர்கள் அதனை அப்படியே சிறப்பாக கொண்டு சென்று முடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை 2022க்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கே ), கேஎல் ராகுல் (து.கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (வி.கி), தினேஷ் கார்த்திக் (வி.கி), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஒய். சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

 

Categories

Tech |