Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரோஹித் சூப்பரா ஆடுனாரு…. நா அடிச்ச ஷாட் ஈஸி கிடையாது…. வெற்றிக்குப்பின் தினேஷ் கார்த்திக் பேசியது என்ன?

இவ்வளவு பெரிய வீரராக ரோகித் சர்மா இருப்பதற்கு அவரது ஆட்டம் தான் காரணம் என்று பினிஷர் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை( 1-1) சமன் செய்தது. நாக்பூரில் நேற்றுமுன்தினம் பெய்தமழையினால்  VCA ஸ்டேடியத்தில் ஈரப்பதம் இருந்ததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 9 மணிக்கு மேல் தொடங்கியது.. பின் டாஸ் வென்ற ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்பின் ஆடிய  ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்களில் 90/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூ வேட் 43 (20) ரன்களும், பிஞ்ச் 31 ரன்களும்  எடுத்தனர்.

பின்னர் ஆடிய இந்தியா 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட் இழந்து 92 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. ரோஹித் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக் டேனியல் சாம்ஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்தார்.

இந்நிலையில் போட்டிக்கு பின் தினேஷ் கார்த்திக் பேசியதாவது, நல்ல பினிஷிங் ரோல் ஆடுவதற்கு நான் பயிற்சி செய்து வருகிறேன், இதையே தான் நான் ஆர்சிபி அணிக்காகவும் செய்தேன். அதை அப்படியே இங்கு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ராகுல் டிராவிட் மற்றும் விக்ரம் ரத்தோர்  ஆகியோர் நான் எப்படி பயிற்சி செய்ய வேண்டும் என்ன மாதிரியான ஷாட்டுகளை பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

மிகச் சிறப்பாக அற்புதமாக ரோகித் சர்மா விளையாடினார். எனக்கு 2 பந்துகள் கிடைத்தது. அதனால் என்னால் முடிந்ததை நான் முயற்சி செய்தேன். உயர்தர புதிய பந்துவீச்சாளருக்கு எதிராகவும், புதிய பந்திற்கு எதிராகவும் இதுபோன்று ஷாட்டுகளை ஆடுவது மிக எளிதானது அல்ல.. இவ்வளவு பெரிய வீரராக ஏன் ரோகித் சர்மா இருக்கிறார் என்பதை இந்த ஆட்டம் வெளிப்படுத்தி காட்டுகிறது. உலக கிரிக்கெட் மற்றும் இந்திய கிரிக்கெட் மட்டும் இல்லாமல் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். எனவே அவரது திறமை எதற்கும் இரண்டாம் பட்சம் இல்லை.

அதுவே அவரை உண்மையிலேயே சிறப்பாக மாற்றுகிறது. அக்சர் பட்டேல் சிறப்பாக பந்து வீசுவது இந்தியாவுக்கு உதவும். ரிசப் பண்ட் தரத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். ஆம், அவரால் பேட்டிங் ஆட முடியவில்லை. ஆனால் அவர் திறமையை வெளிக் கொண்டு வருவார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்..

Categories

Tech |