Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரோஹித் நீங்க 4ஆவது இடத்துல ஆடுங்க….. “இவர ஓப்பனிங் ஆட வைங்க”…. புது யோசனை தெரிவிக்கும் வாசிம் ஜாபர்…. இந்த ஐடியா ஓகேவா..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் ரிஷப் பண்ட் கேஎல் ராகுலுடன் ஓபன் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான போட்டியாளர்களில் இந்திய அணியும் ஒன்று.இந்த டி20 உலக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.  ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். பேட்டிங்கில்  விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்,  ரிஷப் பந்த் ஆகியோரும், ஆல்ரவுண்டராக தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல்  ஆகியோர் இடம்பிடித்தனர். அதேபோல சுழற் பந்துவீச்சில் தமிழக வீரர் ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும், வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்..

மேலும் காத்திருப்பு வீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், இந்த ஆண்டு கோப்பையை வென்றாக வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. இதற்கிடையே இந்திய அணியில் யார் யார் ஆடும் லெவனில் தேர்ந்தெடுக்க வேண்டும், அவர்களை எந்த இடத்தில் ஆட வைக்க வேண்டும் என ரசிகர்களிடையே விவாதம் நடந்து வருகிறது.. அதேசமயம் ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஓபன் செய்வது உறுதி என்று அனைவரும் நினைக்கும் வேளையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் ஒரு தனித்துவமான யோசனையை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் ரிஷப் பண்ட் கேஎல் ராகுலுடன் ஓபன் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், டி20யில் பண்ட்டின் சிறந்த ஆட்டத்தை  என்னால் பார்க்க முடியும் என்று இன்னும் நினைக்கிறேன். ரோஹித் 4 ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். 2013 சாம்பியன் டிராபியில் எம்எஸ் தோனி ரோஹித்தை எப்படி ஓப்பன் செய்ய வைத்தார். அதேபோல பண்டை ரோகித் ஓப்பனிங் ஆட வைக்க வேண்டும். மேலும் கே.எல் ராகுல், பண்ட், விராட் கோலி, ரோகித், சூர்யகுமார் யாதவ் என முதல் ஐந்து வீரர்களின் பேட்டிங் வரிசை அமைய வேண்டும் என நினைக்கிறன் என்று தெரிவித்துள்ளார்.

 

 

Categories

Tech |