Categories
தேசிய செய்திகள்

லக்கிம்பூர் கேரி சம்பவம்….” மத்திய அமைச்சரை சிறையில் தள்ளாமல் ஓயமாட்டேன்.”…. ராகுல் காந்தி ஆவேச பேச்சு….!!

லகிம்பூர் கோரி வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் லகிம்பூர் கேரி வன்முறைச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விவாதம் எழுப்பினார். அப்போது பேசிய அவர் லகிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் என்று கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட மத்திய இணையமைச்சர் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்தி லகிம்பூர் கேரி சம்பவம் குறித்து பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஏற்கனவே இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவே அதனைப் பற்றி இங்கு பேச வேண்டாம் என்று கூறினார். அதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் பற்றி நாடாளுமன்றத்தில் பேசக் கூடாது என்ற எந்த சட்டமும் கிடையாது. அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் பொதுவானதே என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி லகிம்பூர் கேரிக்கு அவர் சென்றிருந்தபோது விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்ததாகவும், இந்த சம்பவத்திற்கு உரிய நீதியை வாங்கி தருவதாக அவர்களிடம் உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர் இந்த விஷயத்தில் தான் உறுதியாக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி விலக வைத்து அவரை சிறையில் தள்ளும் வரை ஓயமாட்டேன் எனவும் கூறினார்.

Categories

Tech |