Categories
தேசிய செய்திகள்

“லக்னோவில் ரிப்பன், டெல்லியில் கத்திரிக்கோல்”…. எதற்கு தெரியுமா?….. பிரதமரை விமர்சித்த அகிலேஷ்….!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் 340 கி.மீ தூரத்தில் ரூ.22,500 கோடி செலவில் பூர்வாஞ்சல் விரைவுசாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் 22 மேம்பாலங்கள், 7 ரயில்வே மேம்பாலங்கள், 114 சிறிய மேம்பாலங்கள், 6 சுங்கச்சாவடிகள், 87 பாதசாரி சுரங்கப் பாதைகள் மற்றும் சுல்தான்பூர் பகுதியில் 3.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு விமான ஓடுபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூர்வாஞ்சல் சாலையை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், கடந்த 2014 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது உத்தரபிரதேசத்தில் ஆட்சி செய்த அரசு வளர்ச்சித் திட்டங்களை புறக்கணித்தது. அதை நினைத்து பார்த்தாலே எனக்கு வேதனையாக இருக்கிறது என்று அகிலேஷ் யாதவ்வையும் விமர்சனம் செய்துள்ளார்.

இதையடுத்து பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அகிலேஷ் யாதவ் பேசியனார். அப்போது சாலையை திறந்து வைக்க லக்னோவில் இருந்து ரிப்பன் வந்தது என்றால், கத்தரிக்கோல் புதுடில்லியில் இருந்து வந்தது என்று அவர் மோடியை விமர்சித்தார். அதனைத் தொடர்ந்து இந்த நெடுஞ்சாலையில் சமாஜ்வாதி ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் பாஜக அரசு நாங்கள் செய்த பணிக்கான பெருமையை  திருட முயற்சி செய்கின்றனர். மேலும் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் தரத்தை சமரசம் செய்து கொண்டு பாஜக அரசு அந்த திட்டச் செலவை குறைத்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரைகுறையாக வேலையை முடித்துவிட்டு பூர்வாஞ்சல் விரைவு சாலையை பாஜக திறந்து வைக்க பார்க்கிறது என்று அகிலேஷ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |