Categories
அரசியல் மாநில செய்திகள்

லஞ்சஒழிப்புத்துறை வழக்குகளை…. சட்டப்படி எதிர்கொள்வேன்…. எஸ்பி வேலுமணி பேச்சு…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியினுடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக சோதனையில் இறங்கினர் . இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இதனால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கைது செய்யப்படுவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது. இவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி அதிமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துவது அரசியல் காழ்புணர்ச்சி என்று குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் விசாரணையின்போது சென்னையிலிருந்து வேலுமணி இன்று கோவை வந்தார் . அப்போதுவிமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பலத்த வரவேற்பு கொடுத்து தங்களுடைய ஆதரவை அவருக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், தன் மீது தொடுக்கப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று கூறினார்.

Categories

Tech |