லட்சம் கேட்டதால் மனமுடைந்த மருத்துவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள லட்சுமிபுரம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஹோமியோபதி மருத்துவரான இவர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சீனிவாசன் மருத்துவமனையில் தனது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி சாந்தி தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சீனிவாசனை உடலை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து சாந்தியிடம் விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சுகாதார துறை இணை இயக்குனராக பணியாற்றி வரும் லட்சுமணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனிவாசனின் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது இந்த மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத்தை மீறி செயல்படுவதாக சீனிவாசனிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட சீனிவாசன் மருத்துவமனை நடத்துவதற்கான சான்றிதழையும், தனது படிப்பு சான்றிதழையும் காண்பித்துள்ளார்.
மேலும் சான்றிதழ்களை ஏற்க மறுத்த லட்சுமணன் மாதந்தோறும் 20,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனை தர மறுத்தால் மருத்துவமனையை சீல் வைத்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சீனிவாசன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி சாந்தி தெரிவித்தார். எனவே எனது கணவனை தற்கொலைக்கு தூண்டிய லட்சுமணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாந்தி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் தென்கரை காவல்துறையினர் லட்சுமணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.