Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கேட்ட VAO, உதவியாளர்”…. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி….!!!!!

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் லஞ்சம் வாங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் அருகே இருக்கும் கொல்லுமாங்குடி பகுதியை சேர்ந்த முகமது தஜ்மில் என்பவர் தனது விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் தேவதாஸ் என்பவரிடம் முகமது தஜ்மில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என கேட்டு இருக்கின்றார்.

அதற்கு அவர் பட்டா மாறுதல் செய்ய ரூபாய் 8000 லஞ்சமாக தரவேண்டும் என கூறியுள்ளார். முகமது தஜ்மில் லஞ்சம் கொடுக்க விரும்பாததால் லஞ்ச ஒழிப்பு போலீஸிடம் புகார் கொடுத்து இருக்கின்றார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் மறைந்திருந்து, முகமது தஜ்மில் ரசாயனம் தடவியே 8000 ரூபாயை லஞ்சமாக கொடுத்தபொழுது கையும் களவுமாக கைது செய்தார்கள். மேலும் அவருக்கு உதவியாக இருந்த கிராம உதவியாளர் சதீஷ்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |