பல லட்ச ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலராகப் சரவணகுமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சரவணகுமார் ஆதிதிராவிடர் நலத் துறையில் காலியாக இருந்த சமையலர் உள்ளிட்ட பணியிடங்களை 12 பேரிடம் லஞ்சம் வாங்கி நிரப்பியுள்ளார். இதற்கான பணத்தை கல்லூரி மாணவர் விடுதியில் காப்பாளராக செந்தில், டிரைவர் மணி ஆகியோர் வசூலித்து சரவணகுமாரிடம் கொடுத்துள்ளனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனராக உயரதிகாரி சரவணகுமரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சரவணகுமாரின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். நேற்று சரவணகுமார் தனது காரில் லஞ்ச பணத்துடன் சென்னை நோக்கி செல்வது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரசூர் பகுதியில் வைத்து காவல்துறையினர் சரவணகுமாரின் கரை மடக்கிப்பிடித்து சோதனை நடத்தியுள்ளனர். அதில் கட்டுகட்டாக ஒரு துணிக்கடையில் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளாக 38 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்க்கும் ஒருவருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக இந்த பணத்தை எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் லஞ்ச பணத்தையும், காரையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.