Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. கரூரில் பரபரப்பு…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக நில அளவையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள எல்.வி.பி நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தோரணகல்பட்டியில் இருக்கும் தனது நிலத்திற்கு தனி பட்டா வழங்க கோரி நில அளவையாளர் ரவி என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் தனி பட்டாவாக மாற்ற 8000 ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென ரவி கூறியுள்ளார். அப்போது 5 ஆயிரம் ரூபாய் தருவதாக சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சரவணன் கரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ரவி சரவணனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக ரவியை கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |