Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” கையும், களவுமாக சிக்கிய பெண் அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாவலர் நகர் 2-வது தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது சகோதரி பத்மினி வசந்தபுரி நகரில் புதிதாக வீடு வாங்கியுள்ளார். அந்த வீட்டின் மின் இணைப்புகளை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் பத்மினி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தஞ்சை மேற்கு மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் கணக்கிட்டாளராக வேலை பார்த்த தேன்மொழி பத்மினியிடம் 4500 லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து அறிந்த மனோகரன் தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மனோகரன் தேன்மொழியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தேன்மொழியை கையும், களவுமாக பிடித்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் தேன்மொழியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |