திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் செல்லா என்பவர் வசித்து வருகிறார் இவர் விமான நிலையம் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். கடந்த 2009-ஆம் ஆண்டு அரிசி ஆலையில் வேலை பார்த்த முனியன் என்பவரை செல்லையா தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முனியனின் மனைவி ரம்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அப்போதைய இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன் பணம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து செல்லையா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழித்து போலீசாரின் அறிவுரைப்படி பணம் வாங்கும் போது முருகேசனை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் முருகேசனுக்கு இருபதாயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.