Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய சப்- இன்ஸ்பெக்டர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையம் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு ஒரு அடிதடி வழக்கில் ராஜேந்திரன் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது பிரகாஷ் ஜாமீனில் விட ராஜேந்திரன் 4000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரகாஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து பிரகாஷ் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜேந்திரனிடம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜேந்திரனை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனை விசாரித்த நீதிபதி ராஜேந்திரனுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வருடம் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |