Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய சர்வேயர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

லஞ்சம் வாங்கிய நபருக்கு 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழநத்தம் கிராமத்திலிருக்கும் வீட்டுவசதி பிரிவு காலனியில் 5 1/2 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். அதில் வீடு கட்டுவதற்கு இடத்தை அளந்து தருமாறு செல்வம் வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது நிலத்தை அளப்பதற்கு வீட்டுவசதி வாரிய சர்வேயர் சின்னையா குமார் 500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் நிலத்தை அளந்து கொடுத்து, அதற்கான வரைபடம் தயாரித்து தருவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து செல்வம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டை செல்வம் சின்னையா குமாரிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குமாரை கையும், களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குமாருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்ததோடு, 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |