Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர்… “3 ஆண்டு சிறை தண்டனை”…. கோர்ட் அதிரடி..!!

முன்னாள் சார்பதிவாளருக்கு லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் குடும்ப தான தொகையை பெறுவதற்கான பத்திரத்தை வாங்குவதற்கு நாயக்கர்பாளையம் பகுதியை  சேர்ந்த நீலமேகம் -கொளஞ்சி தம்பதியினர் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த தம்பதியினர்  பத்திரத்தை வாங்குவதற்காக கடந்த நவம்பர் 4 ,2015 அன்று சார்பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர்களிடம்   சார்பதிவாளர் சுபேதார்கான் 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். இதைப்பார்த்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு நேற்று முன்தினம்  நீதிபதி சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது குற்றம் நிரூபிக்கப்பட்டு சார்பதிவாளர் சுபேதார்கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

Categories

Tech |