Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“10 ஆயிரம் கொடுங்க”….. சீக்கிரம் வேலை முடியும்…. கையும் களவுமாக மாட்டிய அதிகாரி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டா மாற்ற 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட நில அளவையரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள செட்டிகுளம் பகுதியில் ராஜா சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் 12 வீட்டு மனைகள் வாங்கியுள்ளார். இந்நிலையில் வீட்டு மனைகளை தன் பெயருக்கு உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய விராலிமலை தாலுகாவிலுள்ள நில அளவையராக பணிபுரியும் தங்கதுரை என்பவரை அனுகியுள்ளார். அப்போது தங்கதுரை உட்பிரிவு பட்டா மாற்றம் செய்து தருவதற்கு 10,000 லஞ்சம் கொடுக்கும் படி கேட்டுள்ளார்.

இதனையடுத்து பணம் கொடுக்க விரும்பாத தங்கவேல் லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஆலோசனை பேரில் ரசாயனம் தடவிய 10 ஆயிரத்தை தாலுகா அலுவலகம் அருகில் வைத்து தங்கதுரையிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், தங்கதுரையை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளார். இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |