நாமக்கல் மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோட்டை பகுதியில் குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி வசந்தி மானத்தியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வசந்தி அதே பகுதியைச் சேர்ந்த சுகுமாரன் என்ற முதியவர் உதவித்தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலர் வசந்தியிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் வசந்தி நான்காயிரம் லஞ்சம் கொடுக்கும் படி சுகுமாரிடம் கேட்டுள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த சுகுமாரன் நாமக்கல்லில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்துள்ளார். இதையடுத்து சுகுமாரிடம் போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை வசந்தியிடம் கொடுக்கும் படி அறிவுரைத்துள்ளனர். அந்த அறிவுரையின் படி சுகுமார் கடந்த 25 ஆம் தேதி ரசாயனம் தடவிய பணத்தை வசந்தியிடம் கொடுத்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் மறைந்திருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக வசந்தியை கைது செய்துள்ளனர். முதியோரிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் வசந்தியை பணி நீக்கம் செய்ய கலெக்டர் மணிராஜ் உத்தரவிட்டுள்ளார்.