கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் புதூரில் மகேந்திர பாபு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு மகேந்திர பாபு தனது தந்தையின் நிலத்தை அளந்து வரைபடம் தர வேண்டும் என வடக்கு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் வருவாய் துணை ஆய்வாளரான பொன்னுசாமி என்பவர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து மகேந்திர பாபு அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பணம் வாங்கும் போது பொன்னுசாமியை கையும், களவுமாக பிடித்தனர். இந்த வழக்கினை விசாரித்த கோவை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் பொன்னுசாமிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.