லஞ்ச ஒழிப்பு வழக்கில் கைதாகியுள்ள வேலூர் துணை ஆட்சியர் தினகரன் பலகோடி சொத்துக்களை முறைகேடாக வாங்கியிருப்பது அம்பலமாக்கிருக்கிறது.
வேலூரில் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைப்பதாக கூறி ரூ.50,000 லஞ்சமாக வாங்கியதாக தனி துணை ஆட்சியர் தினகரன் தனது கார் ஓட்டுனருடன் கைதாகியுள்ளார். அவரது வீட்டிலில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ .76 லட்சம் பறிமுதல் செய்யயப்பட்டது. இதை குறித்து லஞ்சஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
போலீசார் கைப்பற்றிய ரூ .76 லட்ச பணம் லஞ்சமாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் லஞ்சப் பணத்தை 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளாகவே ஆகவே தர வேண்டும் என்றும், 2000 ரூபாய் நோட்டு இருக்கக் கூடாது என்று அவர் கண்டிப்புடன் கூறிவிட்டதாகவும், 2000 ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்டால் தனக்கு எந்த பிரச்னையும் வரக் கூடாது என்ற சமயோஜிதத்தால் அவ்வாறு கூறியதாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த லஞ்ச பணத்தை திருவண்ணாமலை, சோளிங்கர், போளூர், ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட இடங்களில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதும்என தெரியவந்துள்ளது. இதைற்கான ஆவணக்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். லஞ்ச விவகாரத்தில் சார்பதிவாளர் உட்பட மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இத்துடன் தினகரனுடன் பணியாற்றிய பெண் அதிகாரி உட்பட 11 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை அழைக்க லஞ்சஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்போது கைதாகியுள்ள துணை ஆட்சியர் தினகரன் ஏற்கனவே 2018 ல் கேபிள் டிவி வாட்டாச்சியாராக இருந்தபோது முறைகேடாக உரிமம் வழங்க லஞ்சம் பெற்றதாக லஞ்சஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.