Categories
அரசியல் மாநில செய்திகள்

சொத்துகுவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு…. எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்…!!!

கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக மேற்கொண்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கரூர் ஒழிப்புத்துறை போலீசார் தமிழகம் முழுவதும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்ததில் கணக்கில் வராத 25 லட்சம் பணமும், சில ஆவணங்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணை கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்தார். அந்த அடிப்படையில் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு இன்று ஆலந்தூரில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் தற்போது ஒழிப்பு துறை அலுவலகத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார்.

Categories

Tech |