Categories
தேசிய செய்திகள்

லஞ்ச ஒழிப்பு… 33 அரசு ஊழியர்கள் கைது… அதிர்ச்சி தகவல்…!!!

நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கடந்த 75 நாட்களாக லஞ்ச ஒழிப்பு துறையினர் பல்வேறு இடங்களில் தொடர் சோதனையிட்டு வருகிறார்கள். அதில் சிலர் கையும் களவுமாக மாட்டிக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கடந்த 75 நாட்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனைகளில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.62.82 லட்சமும், திடீர் சோதனைகளில் ரூ.6.96 கோடியும், 7.2 கிலோ தங்கமும், 9.8 கிலோ வெள்ளியையும், 10.52 காரட் வைரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |