Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரி… இதுதான் சரியான தண்டனை… டி.ஐ.ஜி அதிரடி உத்தரவு..!!

பெரம்பலூரில் லஞ்ச வழக்கில் கைதான காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பெரம்பலூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பால்ராஜ் (48). இவர் பெரம்பலூர் ராம்நகர் பகுதியில் வசித்து வரும் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கல் குவாரியில் இருந்து அதிக பாரங்கள் ஏற்றி வந்த 2 லாரிகளை விடுவிப்பதற்காகவும், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதற்காகவும் அவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த 20-ஆம் தேதி பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு வந்த கல் குவாரி ஊழியர் ஜார்ஜ்பெர்ணான்டஸ், இன்ஸ்பெக்டர் பால்ராஜிடம் ரூபாய் 50 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார்.

அதனை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் பால்ராஜை கையும், களவுமாக பிடித்தனர். அதன்பின் அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி ஆனிவிஜயா, இன்ஸ்பெக்டர் பால்ராஜை லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Categories

Tech |