லடாக் பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்தில் இருக்கின்ற லே நகரின் கிழக்குப் பகுதியில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர்.
அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு முறை லடாக் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.