லடாக்கில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர்.
லடாக்கில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிழல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என பதிவாகியுள்ளது. அந்தத் தகவலை தேசிய நிலநடுக்க மையம் கூறியுள்ளது. திடீரென நடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியும் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த மாதத்தில் மட்டும் மூன்றாவது முறை லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அடுத்தடுத்து தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.