Categories
உலக செய்திகள்

லடாக்‍ மோதலால் இந்தியா-சீனா உறவில் மிகப்பெரும் பாதிப்பு ….!!

லடாக்கில் எல்லை மோதலால் இந்தியா-சீனா உறவில் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

கிழக்கு லடாக்கில் இந்திய-சீனா ராணுவம் இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் நிகழ்ந்து வருகிறது. இதில் ஜூன் மாதம் கள்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக லடாக்கின் கிழக்கு எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் லடாக் மோதாதலால் இந்தியா-சீனா இடையிலான உறவு மிகவும் மோசமாகப் பாதித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஆசிய சமூக கொள்கை நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. ஜெய்சங்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியா கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சீனாவுடன் நல்ல உறவைக் கட்டமைத்து இருந்ததாகவும் எல்லைக் கோட்டுப் பகுதியில் நிலவிய அமைதியை அதற்கு அடித்தளமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். ஆனாலும் கிழக்கு லடாக்கில் எல்லைக்கோட்டு பகுதியில் தற்போது அதிக அளவில் சீனப் படைகள் குவிக்கப்பட்டுருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு  விடுங்க்கப்பட்டுள்ள சவால் என்று திரு. ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |