இந்தியாவுக்கு உட்பட்ட லடாக்கை சீனாவின் பகுதியாக ட்விட்டர் குறிப்பிட்டதால் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் வெளியிட்ட இருப்பிட அமைப்பில் இந்தியாவிற்கு சொந்தமான லடாக்கை சீனாவின் பகுதியாக குறிப்பிட்டிருந்தது. இதனால் மத்திய அரசு கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு இச்செயலுக்கு விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ட்விட்டர் பிரதிநிதிகள் குழு நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன்பு ஆஜராகிய போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் கொடுத்த விளக்கம் போதுமானதாக இல்லை என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அதற்கு ட்விட்டர் பிரதிநிதிகள் இந்தியாவின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதாக கூறினர். இதற்கு நாடாளுமன்ற குழு தலைவர் மீனாட்சி லேகி “இந்தியாவின் உணர்வு மட்டுமல்லாது ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை சார்ந்ததுதான் இது” என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த குற்றத்திற்கு ஏழு வருடம் சிறை தண்டனை கொடுக்க முடியும் என தெரிவித்தார்.