Categories
தேசிய செய்திகள்

லட்ச கணக்கில் பிரியாணி பார்சல்…..! தின்று தீர்த்த இந்தியர்கள்….!

கொரோனா கால பொதுமுடக்கத்தில் தங்கள் சேவை குறித்த அறிக்கையை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கின்றனர். வீட்டில் தங்கியிருக்கும் பலரும் ஸ்விகி மூலமாக ஆர்டர் செய்து உணவுகளை வாங்கியுள்ளனர் என்று  ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 5.5 லட்சம் பிரியாணிகள் பதிவு செய்ததாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 20 ஆயிரம் பிறந்தநாள் கேக் ஆர்டர் செய்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஸ்விகி நிறுவனத்தில்  32.3 கோடி கிலோ அளவுள்ள வெங்காயத்தையும், 5.6 கோடி கிலோ அளவில் வாழைப்பழத்தையும் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தினமும் 65 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இரவு 8 மணி உணவு பொட்டலத்தை பதிவு செய்திருக்கின்றார்கள்.1 லட்சத்து 29 ஆயிரம் சாக்கோ லாவா கேக், 1 லட்சத்து 20 ஆயிரம் பிறந்தநாள் கேக் 73 ஆயிரம் கிருமிநாசினி குப்பிகள், 47 ஆயிரம் முகக் கவசங்கள், 3 லட்சத்து 50 ஆயிரம் நூடுல்ஸ் பொட்டலங்களை ஆகியவற்றின் பதிவையும்ஸ்விகி  பெற்றுள்ளது என்று தனது அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |