கேரளா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறார் துஸ்பிரயோக வழக்கில் லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் லண்டன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த இளைஞர் இணையதளத்தின் மூலம் 14 வயது சிறுமியிடம் தவறான நோக்கத்தில் பேசியுள்ளார். ஆனால் அந்த இளைஞருக்கு பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு போலீசாரால் இணையதள பக்கத்தில் போலியாக உருவாக்கப்பட்ட கணக்கு அது என்பது தெரியாமல் போனது. இதனை தொடர்ந்து அந்த இளைஞன் சிறுமியை லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வரும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதன்படி அந்த இளைஞர் தான் தங்கியிருந்த இடத்திலிருந்து ஹோட்டலுக்கு ஒரு மணி நேரம் கழித்து சென்றார். ஆனால் அந்த இளைஞரை எதிர்பாராதவிதமாக காவல்துறையினர் மற்றும் சிறார் பாதுகாப்பு அதிகாரிகள் குழு வரவேற்றுள்ளது. பின்பு அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையான நிலையில் சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் நாடு கடத்தப்படுவர் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் இளைஞர் பாலியல் உறவுக்கு ஆசைப்பட்டு தவறு செய்ததாக காவல் துறையினரிடம் கெஞ்சியும் கைது நடவடிக்கையில் இருந்து விடுவிக்க முடியாது என்று திட்டவட்டமாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது போன்ற போலீசாரால் உருவாக்கியுள்ள போலி சமூக ஊடகங்கள் பக்கத்தில் மேலும் இரு சிறுமிகளுடன் இந்த இளைஞர் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.