லண்டனில் காணாமல் போன இளம்பெண்ணின் வழக்கில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு லண்டனில் வசித்து வந்த 33 வயதான சாரா எவெரெர்ட் என்ற இளம்பெண் கடந்த புதன்கிழமை அன்று நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது மாயமாகியுள்ளார் .இந்த வழக்கு தொடர்பாக கென்ட் பகுதியில் வசிக்கும் 48 வயதான வெயின் கொஸ்சன்ஸ் என்ற போலீசார் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வெயின் கொஸ்சன்ஸ்க்கு உதவியதாக 39 வயதான ஒரு பெண்ணையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
இந்த வழக்கில் வெயின்க்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்த நிலையில் தான் கைது வெயின் செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் வெயின் வாழும் கென்ட் பகுதியில் ஒரு இளம்பெண்ணின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் அது மாயமான சாராவின் உடலாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதனால் சாராவின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். ஆனால் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பிறகுதான் உண்மை தெரியவரும் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.