இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பின் மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறி உள்ளார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் 3-ம் சார்லஸ் மன்னர் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் 3-ம் சார்லஸ் மன்னர் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த நண்பர்களுடன் சேர்ந்து மன்னர் சார்லஸ் இசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவானது பக்கிங்ஹாம் அரண்மனையின் அதிகாரப்பூர் twitter பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.