Categories
உலக செய்திகள்

லண்டனில் பெண் வங்கி ஊழியர் … சொந்த குடும்பத்தாரை ஏமாற்றி பணமோசடி… அம்பலமான சம்பவம்…!!!

லண்டன் மாநகரில் வங்கியில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தாரை ஏமாற்றி பண மோசடி செய்தது அம்பலமாகியது.

லண்டன் நகரில் கிரீன்விச் பகுதியை சேர்ந்த ஹுயின் லீ (வயது 40). இவர் தனியார் வங்கி ஒன்றில் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தனது குடும்ப உறுப்பினர்கள் மூவரிடம் இருந்து£68,499 மதிப்புடைய பணத்தை வாங்கி ,தன்னுடைய வங்கியில் முதலீடு செய்து தருவதாக கூறியுள்ளார். இவர் கூறியதை நம்பிய அவர்கள் , ஹுயின் லீ யிடம்  பணத்தை வங்கியின் முதலீடு செய்ய கொடுத்தனர். அந்தப் பெண் அவர்களிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு, வங்கியில் முதலீடு செய்யாமல் தன்னுடைய சொந்த செலவிற்கு  பயன்படுத்தி வந்தார்.

ஆனால் அவர்களிடம் பணம் வங்கியில் முதலீடு செய்ததற்கான போலி ஆவணங்களை காட்டி நம்ப வைத்துள்ளார்.சில மாதங்களுக்குப் பிறகு குடும்பத்தாருக்கு அவர்  மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி  விசாரித்தபோது அவர் வசமாக மாட்டிக் கொண்டார். பண மோசடியில் ஈடுபட்ட இவரை  2019ஆம் ஆண்டு கைது செய்தனர். இந்நிலையில்  ஹுயின் லீ மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தான் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். இதற்கான தண்டனை வருகின்ற மே மாதம் 11ஆம் தேதி வழங்க உள்ளனர்.

Categories

Tech |